சென்னையில் உள்ள வீட்டை காலி செய்த ஓபிஎஸ்.!! காரணம் இதுவா.?

Photo of author

By Vijay

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் சென்னை தி நகரில் உள்ள வீட்டை காலி செய்ய உள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இவர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாக அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, அவர் அந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு தி நகரில் உள்ள பிரபல இயக்குனர் ஷங்கர் வீட்டில் நான்கு மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தான் ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி காலமானார். தனது மனைவி இறந்த நாளிலிருந்து மிகுந்த வேதனையில் இருக்கும் ஓபிஎஸ் தற்போது குடியிருக்கும் தி நகர் வீட்டை காலி செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன் காரணமாக, அவர் தற்போது தற்காலிகமாக சென்னை அடையாறில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அடையாறு பகுதியில் புதிய வீடு வாடகைக்கு பார்க்கும் நடவடிக்கைகளும் தொடங்கி இருக்கின்றாராம். விரைவில் வீட்டை வாடகைக்கு எடுத்து போய்விடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.