பொறியியல் படித்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) வேலைவாய்ப்பு.!!

0
70

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் Graduate & Technician Apprentice ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதி மற்றும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) Graduate & Technician Apprentice பணிகளுக்கு 234 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் Apprenticeship விதிப்படி குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

Graduate Apprentice – அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice – Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

Graduate Apprentice – ரூ.4984/-
Technician Apprentice – ரூ.3582/-
தேர்வு செயல்முறை :

மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 16.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official PDF Notification – http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf

Apply Online – http://www.mhrdnats.gov.in/