சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

Photo of author

By Parthipan K

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

Parthipan K

இன்று அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. நேற்று சசிகலா ஜெயலலிதா மாற்று MGR சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இன்று பொன்விழாவை ஒட்டி சசிகலா தியாகராய நகரில் உள்ள MGR இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

நேற்றிலிருந்தே கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள், நலம் விரும்பிகள் என அடுத்தடுத்து பேட்டிகள் வந்த வண்ணம் உள்ளது.

MGR மறைவிற்கு பின் ஜெயலலிதா ஒருங்கிணைத்த கட்சி அவரின் மறைவிற்கு பின் கட்டுக்கோப்பு இல்லாமல் சிதறிப்போனது.

முதலில் சசிகலா தலைமையில் எல்லாம் நன்றாகவே போகிறது என இருந்தாலும், OPS ராஜினாமா, பின்பு அவர் கொடுத்த பேட்டி, கட்சியின் அமைச்சர்களும், தொணடர்களும் இரு பிரிவாக சென்றது என குழப்பம் மேல் குழப்பமாகவே இருந்தது.

சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் உள்ளே சென்றதும் OPS, EPS மீண்டும் இணைந்து ஆட்சி நடத்தினர்.

ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்நேரத்தில் சசிகலாவும் தண்டனைகாலம் முடிந்து வெளியில் வந்தார்.

நேற்று சசிகலா சற்று மௌனம் கலைத்து பேச தொடங்கினார். ஜெயலலிதா சமாதியில் தனது 4 வருட பாரத்தை இறக்கி வைத்தாக கூறினார்.

இன்று தியாகராய நகரிலுள்ள MGR இல்லத்தில் கல்வெட்டில் அதிமுக பொது செயலாளர் VK சசிகலா என்று இருந்தது.

இந்நிலையில் புகழேந்தி OPS, EPS மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் பன்னீர் செல்வம் சசிகலாவுடன் இணைவார், எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்பது போலவும் கூறியுள்ளார்.