தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! எந்தெந்த ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா!
கடந்த வாரம் முதலில் இருந்தே கனமழை பெய்து வருகின்றது.தொடர்ந்து மழை நிக்காமல் பெய்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகி உருவாகியதால் கடந்த வாரங்களில் கனமழை பெய்தது.அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் மழை சற்று குறைய தொடங்கியதால் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து கொண்டுள்ளது.நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,கடலூர் ,விழுப்புரம் ,மயிலாடுதுறை ,திருச்சி ,செங்கல்பட்டு,அரியலூர்,பெரம்பலூர்,நீலகிரி ,கரூர் ,திருவாரூர் ,சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பள்ளிகளுக்கு தேர்வுகள் நெருங்கி வருவதால் பாடங்கள் அனைத்தும் இன்னும் முடிக்காத நிலையில் அடிக்கடி விடுமுறை வருவாதல் மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுத போகின்றனர் என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.