ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?

0
187

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?

குழந்தைகள் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு இவை மிகவும் இனிப்பு நிறைந்ததாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றார்கள். மேலும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் மட்டுமே செய்ய முடியும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள் ஆனால் ஆரஞ்சு பழத்தில் பாயாசம் கூட செய்யலாம் அதற்கு தேவைப்படும் பொருட்கள்.

பால்4 கப் ,ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை1 கப், ஆரஞ்சு எசன்ஸ் 3 ஸ்பூன், புட்கலர் ஆரஞ்சு பவுடர்ஒரு சிட்டிகை, கண்டென்ஸ்டு மில்க் அரை கப் இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு பாயாசம் செய்யும் முறை:முதலில் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிட வேண்டும். அதன் பிறகு ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் சேர்க்க வேண்டும்.

பிறகு கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு சிறிது நேரம் ஆறிய பின் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்து குளிர வைக்கவும்.

ஆரஞ்சுப் பழத்தை தோலுரித்து விதை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதையும் சேர்த்து குளிரவைக்கவும். சுவையான ஆரஞ்சு பாயாசம் ரெடி ஆகிவிடும்.

 

 

Previous articleஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..
Next articleஅரியலூர் அருகே ஏடிஎம் கார்டு திருடன் ஓட்டம்!! மடக்கி பிடித்த பொதுமக்கள்!..