அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!
தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர்.
பின்பு கல்வியை தொடங்குவர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளில் அட்மிஷன் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. இவ்வாறு இருந்த நிலையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவு போன்ற வெளியிட்டார். அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏதேனும் ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வந்து, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.