ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!! 

Photo of author

By Amutha

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!! 

Amutha

Oscar shortlist!! Selection of famous director!!

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!! 

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் தேர்வு குழுவுக்கு 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இதில் பிரபல இயக்குனர் மணிரத்தினமும் பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் தேர்வு குழுவிற்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழைக்கப்படுவார்கள். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றிய பட்டியல் ஒன்றை ஆஸ்கர்  குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் 2023 -ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில்  இந்தியர்கள்  உட்பட 398 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் பிரபல இயக்குனர் மணிரத்தினம், இசையமைப்பாளர்  கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒளிப்பதிவாளர் கே கே செந்தில்குமார் தயாரிப்பாளர் கரண்ட் ஜோக்கர் ஆகியோரும் உறுப்பினர்களாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக தமிழகத்திலிருந்து ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபல நடிகர் சூர்யா ஆகியோர் ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மணிரத்தினமும் தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சினிமா உலகில் உலக அளவில் இனிமேல் தமிழர்களின் பங்கும் அதிகமாக இருக்கும் என்பது சாத்தியமாகும் காலம் விரைவில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.