ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

0
102
Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!
Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!!

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.அதன்படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டிக்கான பல பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.

திட்டமிட்ப்பட்ட பணிகளை முறையாக செயல்படுத்தியதை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த திட்டப்பணிகள், சிறந்த நகரங்கள், செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகள் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகமானது  ஸ்மார்ட் சிட்டி மிஷன் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருதை பெறுவதற்கு நாட்டில் இருந்து 52 நகரங்களில் 88 முன்மொழிவுகள் சென்றது. இதில் கோவை மாவட்டத்திற்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கோவை மாவட்டத்தில் குளங்களை புனரமைப்பு செய்தது, ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு, ரேஸ்கோர்ஸில் மாடல் ரோடு, அமைக்கப்பட்டது ஆகியவற்றை மையப்படுத்தி ‘பில்ட் என்விரான்மென்ட்’ என்ற பிரிவில் கோவை மாவட்டத்திற்கு முதல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட்  சிட்டி உருவாக்கும் விதமாக திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டில் பல மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவியது.இதில் தேசிய அளவில் தமிழ்நாடு மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் கோவைக்கு ஸ்மார்ட் சிட்டி விருது வழங்கும் விழா செப்டம்பர் 27ம் தேதி புதன்கிழமை இந்தூரில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இந்நிகழ்ச்சியில்  பங்கேற்று விருது வழங்கவுள்ளார். கோவை மாநகராட்சி சார்பில் கமிஷனர் பிரதாப் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கோவை மாவட்டத்திற்கான ஸ்மார்ட் சிட்டி விருதை பெறுகிறார்.

Previous articleஅந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!
Next article51 ரன்களுக்கு சுருண்ட வங்கதேச மகளிர் அணி!!! அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு இந்தியா மகளிர் முன்னேற்றம்!!!