வெளியே அழகு நிலையம் உள்ளே அந்தரங்க தொழில்! காவலுக்கு போலீசா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பெண்களுக்கு தொடர்ந்து பல வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. மாதந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்தால் பல பெண்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாணவியின் உயிரிழப்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல மாநிலங்களிலிருந்து பெண் குழந்தைகளை வேறொரு மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி ஈடுபடுத்த செய்வது வழக்கமாகவே உள்ளது.
இதைத் தடுத்து பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், குற்றங்கள் சில இடங்களில் நடந்து வருவது இயல்பாகிவிட்டது. அதுமட்டுமின்றி சில சமயங்களில் சட்டம் காசுக்கு அடிபணியவும் ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் திரிபுராவில் இருந்து சில பெண் குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்து துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சில நபர்களை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். திரிபுரா மாநிலத்தில் வறுமையில் சிரமப்படும் பெண் குழந்தைகளை கவனித்து நீங்கள் என்னுடன் வந்து விடுங்கள் நான் அழகு நிலையங்கள் போன்றவற்றில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி இங்கு சென்னைக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.
அந்தப் பெண் குழந்தைகளும் தங்களின் குடும்பத்திற்காக இவர்களின் வார்த்தையை நம்பி இவர்களுடன் வருகின்றனர். அவ்வாறு வரும் பெண் குழந்தைகளை அழைத்து வருபவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். அந்தவகையில் திரிபுராவில் இருந்து அழைத்து வந்த பெண் குழந்தைகளை மைனுதீன் மற்றும் அலாவுதீன் ஆகியோர் கேளம்பாக்கம் அருகே உள்ள படூர் என்ற பகுதியில் ஒரு தனி வீடு எடுத்து அதில் அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் தினந்தோறும் அங்கு அடைத்து வைத்துள்ள பெண்களிடம் அத்துமீறு வதாகவும் பாலியல் தொழிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய படுத்துவதாகவும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாலியல் தொழிலுக்கு இந்த பெண் குழந்தைகளை டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவ்வாறு அழைத்துச் செல்லுகையில் பெண்கள் வர இயலாது எனக் கூறி நடுரோட்டில் அவர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அங்குள்ள காவல் துறையிடம் புகார் அளித்தனர். ஆனால் காப்பாற்ற வேண்டிய காவல் துறையினரோ இந்தப் பெண் குழந்தைகளை மாற்றிவிடும் தொழிலுக்கு உதவியாக இருக்கும் சலீமா என்பவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் சில பெண் குழந்தைகள் யானைக்கவுனி வால்டாக்ஸ் என்னும் சாலையில் உள்ள தனியார் விடுதியில் சில நபர்களுடன் இருப்பதாக காவல் துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விடுதிக்கு சென்று அந்தப் பெண் குழந்தைகளை மீட்டுள்ளனர். காவல் அதிகாரிகள் வருவதை கண்ட அந்த குழுவின் தலைவி மற்றும் சிலர் ஆண் நபர்கள் தப்பிக்க முயன்றனர். அதில் இருவர் மட்டும் போலீசார் வலையில் சிக்கினர். அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகளிடம் குழந்தைகள் நல கவுன்சில் உறுப்பினர்கள் முன்னிலையில் பெண் காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்ததும். எங்களின் வறுமையை கண்டறிந்து ஆசை வார்த்தை கூறி சலீமா மற்றும் அவரது கணவர் அன்வர் உசேன் என்பவர் எங்களை திரிபுராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாக பெண் குழந்தைகள் கூறியுள்ளனர். இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தற்பொழுது காத்திருப்பு பட்டியலில் மாற்றப்பட்டுள்ளனர்.