பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி! 

0
76
The Pegasus affair! Prime Minister Modi in a dilemma!
The Pegasus affair! Prime Minister Modi in a dilemma!

பெகாசஸ் விவகாரம்! திக்கு முக்காடும் பிரதமர் மோடி!

இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் ஒரு பிரிவுதான் என்எஸ்ஓ. இந்நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருள் என்ற ஒன்றை தயாரித்தது. இதனைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் செல்வாக்கு வாய்ந்தவர்கள் போன்றோரின் செல்போன் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இதனை பல நாட்டினரும் உறவு காண்பதற்காக வாங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி நாட்டுக்கு எதிராக ஏதேனும் சதித்திட்டம் நடக்கிறதா என்பதை கண்டறியும் இதனை பயன்படுத்துகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் இந்த உளவியல் மென்பொருள் வாங்க பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாளிதழ் ஒன்று திட்டவட்டமாக கூறியது.

அந்தவகையில் இந்தியாவின் முக்கிய வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் நீதிபதிகள் என 300க்கும் மேற்பட்டோர் இன் செல்போன்கள் இந்த மென்பொருள் கொண்டு பயன்படுத்தி முக்கிய தகவல்கள் சேகரித்த படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை பற்றி முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியதன் விளைவாக உச்சநீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மேலும் இது குறித்து பல எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால் பிரதமர் மோடியோ நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என்றே கூறினார்.

இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இது உண்மை என்று அம்பலமாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிரதமர் மோடி உளவு  செயலியை வாங்கவில்லை என கூறி பொய் உரைத்துள்ளார். அதுமட்டுமின்றி சொந்த நாட்டிற்கு தேசத்துரோகம் செய்துள்ளார். அதனால் இவர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறினார். அந்நிய நாட்டின் உளவு செயலியை சொந்த நாட்டில் பயன்படுத்தி பதவியின் பொறுப்பற்ற தன்மையான நடந்துகொண்டு உள்ளதால் கட்டாயம் மோடி பதவி விலக வேண்டும் என்று கூறினார். அதேபோன்று உச்சநீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் உண்மையை கூறாமல் சட்ட விரோதமாக பொய்யுரைத்து விட்டார்.

இதற்கு தற்பொழுது என்ன கூற போகிறார். இது நாட்டிற்கே பெருத்த அவமானம். அதனால் பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிவித்தார். இவர் பல கட்சிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் இந்தியாவின் பெகாசஸ் அண்ணிய நாட்டு உணவு செயலியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய நபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கப்பட்ட உண்மை என தற்போது நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதேபோல உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவிடம் சைபர் கிரைம் நிபுணர்கள் சேகரித்து ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தங்களின் செல் போன்கள் ஒட்டுக் கேட்பது என கூறி மனு அளித்த மனுதாரர்களின் தொலைபேசிகளையும் சைபர் கிரைம் ஆய்வு செய்தது. அந்த செல்போன்களை இரண்டு சைபர் கிரைம் குழுக்கள் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரின் ஆய்வின் மூலம் பெகாசஸ் உளவியல் பயன்படுத்தி செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட உறுதியானது. அதனால் இந்த உளவியல் பயன்படுத்தி ஒட்டுக் கேட்டதை குறித்து நாடாளுமன்றத்தில் முதல் நாளிலேயே இது பற்றி பேச உள்ளதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல பெகாசஸ் மென்பொருள் கொண்டு ஒட்டு கேட்கப்படவில்லை என கூறிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் பெகாசஸ் மென்பொருள் குறித்து பேசப்படும் என எதிர்க் கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர்.