வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!
1.பட்ஜெட்:
நாம் செய்த செலவு தேவையானவையா? இல்லையா? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
சம்பளம் வந்ததும் குறைந்தது 30% சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். மீதம் இருக்கும் பணத்தில் 70% பணத்தை வைத்து வீட்டு செலவை மேனேஜ் செய்ய வேண்டும்.
நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் குறித்து வைத்து மாத இறுதியில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம். எந்த செலவை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து அடுத்தமுறை சரியாக பணத்தை கையாள வேண்டும்.
வீட்டு செலவிற்கு என்று ஒதுக்கப்படும் பணத்தில் அவசரத் தேவைக்காக சிறிது பணம் எடுத்து வைப்பது நல்லது. குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு அவை பெரும் உதவியாக இருக்கும்.
2.கடன்:
உங்களுக்கு கடன் இருந்தால் அதை விரைவாக அடைக்க பாருங்கள். நீங்கள் செய்யும் வேலையில் ஓவர் டைம் பார்க்கலாம். அல்லது வேறு ஏதேனும் பார்ட் டைம் ஜாப் செய்து பணம் சம்பாதிக்கலம். இப்படி சம்பாதிக்கும் பணத்தை கடன் அடைக்க பயன்படுத்தலாம்.
முடிந்தவரை கிரெடிட் கார்டு யூஸ் பண்ணாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள். காரணம் டெபிட் கார்டு நம்மை கடனாளியாக மாற்றிவிடும்.
நாம் வாங்கும் ரெகுலர் இன்கம் கூட எஸ்ட்ரா ஒர்க் செய்து சம்பாதிக்கும் பணத்தை கடன் அடைக்க பயன்படுத்திக் கொள்ளவதால் நம்முடைய இன்கம்மில் இருந்து நாம் சேமிக்கும் பணம் செலவாகாமல் பாதுகாக்கப்படும்.
3.ஹோட்டல் உணவு தவிர்த்தல்:
நீங்கள் வாரம் ஒருமுறை அந்த வாரத்திற்கு என்ன சமைக்க வேண்டும் என்று எழுதி வைத்து அதற்கேற்ப காய்கறிகளை வாங்கி வந்து சமைக்க பழங்குங்கள். இதன் மூலம் தேவை இல்லாத காய்கறிகள் வாங்குவது தவிர்க்கப்பட்டு பணம் மிச்சமாகும்.
அதேபோல் ஹோட்டல் உணவு வாங்கி உண்பது தவிர்க்கப்படும். இதனால் பணம் செலவாகாமல் இருப்பதோடு உடல் ஆரோக்கியமும் கெடாமல் இருக்கும்.
அதேபோல் அடிக்கடி குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் வாங்கி கொடுப்பதை குறைத்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து வாங்கி கொடுப்பதன் மூலம் அவர்கள் உடல் ஆரோக்கியமும் கெடும். பணமும் தேவை இல்லாமல் செலவாகும்.
4.ஷாப்பிங் செல்வது தவிர்த்தல்:
நீங்கள் அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால் நிச்சயம் உங்களிடம் பணம் தங்காது. எனவே ஷாப்பிங் செல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளவும்.
அடிக்கடி புது புது ஆடைகள் எடுப்பதை முற்றலும் தவிர்த்தாலே நிறைய பணம் சேமிக்க முடியும். அதுமட்டும் இன்றி வீட்டிற்கு தேவையே இல்லாத பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் பொருட்கள், நமக்கு செட் ஆகாத பொருட்களை வாங்கி வைப்பதால் பணம் தேவை இல்லாமல் செலவாகும். இது போன்ற பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.
அதேபோல் அடிக்கடி தியேட்டர் செல்வது, மால் செல்வது போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் அதிகப் பணம் சேமிக்கலாம்.
5.முதலீடு: ஏலச் சீட்டு கட்டுதல், நகை சீட்டு கட்டுதல், வங்கியில் சேமித்தல்
நாம் சேமிக்கும் பணத்தை பெருக்குவதற்கான வழிகளை நாம் சரியாக செய்ய வேண்டும். நம்பகத் தன்மை கொண்ட இடத்தில் சீட்டு கட்டுவதை உறுதி செய்து கொள்ளவும். நாம் சேமிக்கும் பணம் குறைவு என்றாலும் அதனால் பின்னாளில் கிடைக்க கூடிய லாபம் அதிகமாகத் இருக்கும். சிறு துளி தான் பெரு வெள்ளமாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நீங்கள் சேமிக்கும் பணம் 1 ரூபாய் என்றாலும் அதற்கு மதிப்பு இருக்கின்றது.
“புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது” என்ற பழமொழிக்கேற்ப மற்றவர்களை பார்த்து அவர்களைப் போல் ஆடம்பரமாக வாழ வேண்டும். ரிச் லுக் காட்ட வேண்டுமன்று நம் வரவிற்கு மீறி செலவு செய்யத் தொடங்கினோம் என்றால் நிச்சயம் நாம் கடனாளியாகத் மாறுவோம்.
உங்களுக்கு மது பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளவும். நம் குழந்தைகளின் எதிர்க்கலாம், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்பதை மனதில் நினைத்துக்கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுதல் அவசியம்.
நம்ம வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் தான் சரியாக திட்டமிட வேண்டும். மற்றவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது, அவர்கள் எப்படி வாழ்கிறர்கள் என்பதை பார்க்காமல் நம் வாழ்க்கைக்கு என்ன தேவை, எதை செய்தால் வாழ்வில் முன்னேற முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிடல் இருக்க வேண்டும்.
நம்மால் பணம் சம்பாதிக்க முடியும். சேமிக்க முடியும். ஒருபோதும் கடன் வாங்கக் கூடாது என்று உங்கள் மனதில் நினைத்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். நிச்சயம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.