ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் மாநிலம்! தங்களது பங்கை தங்களுக்கே தருமாறு கதறும் டெல்லி முதல்வர்!
கொரோனா தொற்றானது தற்போது 2வது அலையாக உருமாறி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் இத்தொற்று அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றின் பாதிப்பும் பெருமளவாக தான் உள்ளது.தற்போது இந்தியாவில் மட்டும் 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி உள்ளது.அந்தவகையில் இந்தியாவில் அதிக அளவு தொற்று உள்ள மாநிலங்களாக குஜராத்,டெல்லி,மகராஷ்டிரா ஆக உள்ளது.இதில் அதிகம் தொற்றுள்ள 11 மாநிலங்களில் டெல்லியும் ஒன்று.தற்போது டெல்லியில் வார இறுதி விடுமுறை நாட்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இன்றைய கணக்கின்படி ஓர் நாளில் மட்டும் டெல்லியில் 20 ஆயிரத்து 523 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.
நாளுக்குநாள் கொரோனாவால் அதிகப்படியானோர் பாதித்து வருகின்றனர்.இதனால் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஐசியு வார்டு மெத்தை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.நாளுக்கு நாள் அதிக அளவு கொரோனா தொற்று மக்களை பாதித்து வருவதால் அதிக அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரவால் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.தற்போது 100 க்கும் குறைவான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மெத்தைகள் உள்ளாதாக கூறியுள்ளார்.அதனால் அதிக அளவு தேவை இருப்பதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுடன் டெல்லி முதலமைச்சர் இதுகுறித்து பேசியுள்ளார்.
தற்போது அரசு மருத்துவமனையில் 10000 மெத்தைகளில் வெறும் 1,80௦ மெத்தைகளே கொரோனா பாதித்தவர்களுக்காக ஒதுக்கி உள்ளனர்.அதனால் குறைந்த பட்சம் 7000 மெத்தைகளாக உயர்த்த வேண்டும் என சுகாதார அமைச்சரிடம் டெல்லி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.இவர் பல வேண்டுகோள்களை மத்திய அரசிடம் கூறியும் மத்திய அரசு இவர்களுக்கு வழங்க வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அவரச தேவைகளை வழங்காமல் பிற மாநிலங்களுக்கு அனுப்புவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜிரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்பொழுது அதிக அளவு கொரோனா தொற்றானது டெல்லியில் பரவி வருவதால் அதிக அளவு ஆக்சிஜன் தேவைக்கு தற்போது டெல்லி தள்ளப்பட்டுள்ளது.வழக்கத்தை விட தற்போது டெல்லியில் ஆக்சிஜன் விநியோகத்தை குறைத்து மக்களின் உயிருடன் விளையாடுகின்றனர்.டெல்லி தர வேண்டிய பங்குகளையும் பிற மாநிலங்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.