புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறல்! திமுக சார்பாக புகார்!

0
90

கடந்த ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.என்னை தொடர்ந்து அனைத்து வாக்குபெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த வாக்குச் சாவடி வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையும் , தமிழக காவல்துறையும், இணைந்து சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடந்து கொண்டிருப்பதாக திமுக சார்பாக அடுத்தடுத்து புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மையத்திற்கு அனுமதி பெற்றவர்கள் மற்றும் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே சென்று வர இயலும் இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதி சான்று போடப்படாத காவல் துறைக்கு சொந்தமான வேன் ஒன்று சென்றிருக்கிறது. அந்த சமயத்தில் அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த திமுகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த காரை நிறுத்தி இருக்கிறார்கள்.

அதன் பிறகு அந்த வேனை சோதனை செய்ததில் கட்டிங் பிளேடு ஸ்க்ரூட்ரைவர் போன்றவை கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பாக தகவல் அறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் நேற்று புகார் மனு கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக கே.கே. செல்லபாண்டியன் தெரிவித்ததாவது, வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்கள், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள், மட்டுமே சென்று வர வேண்டும் ஆனால் டீ வாங்கி வருவதற்காக காவல்துறை சென்றதாகவும் இந்த வேன் மெட்டல் டிடெக்டர் பிரிவினர் பயன்படுத்துவதால் அதற்குள் பொருட்கள் இருந்திருக்கின்றன என்று தெரிவித்து இருக்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள். ஆனால் முக்கிய பணியை செய்யும் இந்த வேனுக்கு எதற்காக அனுமதி சான்று வழங்கப்படவில்லை என்று சந்தேகம் எழுந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார் செல்லப்பாண்டியன்.

இதே வளாகத்திற்குள் தேர்தலுக்கு மறுதினம் காலையில் விராலிமலை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு அணை காகித சீல் கிடந்தது. திருமயம் சட்டசபைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கின்ற அறையின் வெளிப் பகுதியில் இருக்கின்ற சிசிடிவி கேமரா பழுதாகி இருக்கிறது. இது குறித்து தனித்தனியாக புகார் மனு கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அனுமதி சான்று வாங்காத காவல்துறை வாகனம் வந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ச்சியாக விதிமீறல் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் வாக்கு என்னும் மைய்யத்தை ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சி வ.வீ மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு இருக்கிறார்.