எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!!

0
113
#image_title

எம்.ஜி.ஆரின் படங்களில் தோன்றிய “பாடும் நிலா” எஸ்.பி.பியின் பாடல்கள்!!

இந்திய திரைத்துறையில் பின்னணிப் பாடகர்,இசையமைப்பாளர்,நடிகர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் S.P. பால சுப்ரமணியம். “பாடும் நிலா” என்று கொண்டாடப்படும் இவர்
தெலுங்கு,தமிழ்,கன்னடம்,இந்தி,மலையாளம்  உள்ளிட்ட திரைப்படங்களில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கிய இவர் 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களில் இவர் பாடிய பாடல்கள் பற்றிய தொகுப்பு இதோ.

எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற S.P. பால சுப்ரமணியம் பாடல்கள்:-

1.கடந்த 1969 ஆம் ஆண்டு வெளியான “அடிமைப் பெண்” திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்ற பாடலை பாடினார்.திரைத்துறையில் இவர் பாடி வெளிவந்த முதல் பாடலாகும்.இந்த பாடல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த பாடல் என்ற வரிசையில் உள்ளது.

2 கடந்த 1970 ஆம் ஆண்டு வெளியான “தேடி வந்த மாப்பிளை” திரைப்படத்தில் ” வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்” என்ற பாடலை பாடினார்.

3.கடந்த 1970 ஆம் ஆண்டு வெளியான “தலைவன்” திரைப்படத்தில் “நாராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்” என்ற பாடலை பாடினார்.

4.கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான “நீரும் நெருப்பும்” திரைப்படத்தில் “மாலை நேர தென்றல் என்ன பாடுதோ” என்ற பாடலை பாடினார்.

5.கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான “சங்கே முழங்கு” திரைப்படத்தில் “இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை” என்ற பாடலை பாடினார்.

6.கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தில் “அவள் ஒரு நவரச நாடகம்” என்ற பாடலை பாடினார்.

7.கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான “பட்டிக்காட்டு பொன்னையா” திரைப்படத்தில் “இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை” என்ற பாடலை பாடினார்.

8.கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான “நேற்று இன்று நாளை” திரைப்படத்தில் “பாடும் போது தான் தென்றல் காற்று” என்ற பாடலை பாடினார்.

Previous articleரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!
Next articleவிஜய்யுடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்!!!!