ஆசனவாயில் வலி ஏற்பட்டு உருண்டை வடிவில் மலம் வெளியேறுகிறதா? இதை க்யூர் செய்யும் அற்புத மெடிஷன் இதோ!!

Photo of author

By Divya

ஆசனவாயில் வலி ஏற்பட்டு உருண்டை வடிவில் மலம் வெளியேறுகிறதா? இதை க்யூர் செய்யும் அற்புத மெடிஷன் இதோ!!

Divya

Pain in the anus and lumpy stools? Here is a wonderful medicine that cures it!!

ஆசனவாயில் வலி ஏற்பட்டு உருண்டை வடிவில் மலம் வெளியேறுகிறதா? இதை க்யூர் செய்யும் அற்புத மெடிஷன் இதோ!!

உங்களில் பலருக்கு மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் வலி ஏற்பட்டிருக்கும்.இதற்கு காரணம் வறண்ட மலங்கள் வெளியேறுவது தான்.மலம் கழிக்கும் உணர்வு காலையில் எழுந்த உடன் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.ஒருவேளை நீங்களாகவே முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்கள் என்றால் அவை உடலில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

முதலில் உணவுப்பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த கிழங்கு,காய்கறிகளை சாப்பிட வேண்டும்.அதேபோல் உடலுக்கு தேவையான நீர் அருந்த வேண்டும்.

இதையெல்லாம் செய்யத் தவறினால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும்.இதனால் விரைவில் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.காலையில் எழுந்ததும் சுடுநீர் ஒரு கிளாஸ் அருந்தினால் மலக் குடலில் இறுகிய மலம் இளகி வந்து விடும்.

சிறிது விளக்கெண்ணெயை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் மலக் கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேற்றபட்டு விடும்.

செம்பருத்தி பூ ஒரு சிறந்த மலமிளக்கி ஆகும்.செம்பருத்தி இதழ்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீரும்.

இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்த பிளாக் காபியை குடிப்பதன் மூலம் நாள்பட்ட மலக் கழிவுகள் வெளியேறும்.ஒரு சிலருக்கு டீ,காபி குடித்தால் தான் மலம் வெளியேறும்.இவை தவறான பழக்கம் ஆகும்.உடலில் உள்ள கழிவுகளை ஆரோக்கியமான முறையில் வெளியேற்றினால் மட்டுமே எந்தவித பக்க விளைவுகளையும் சந்திக்காமல் இருக்க முடியும்.