பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Parthipan K

Updated on:

Painter suicide! Excitement in Salem district!

பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் தாதாகபட்டி கேட்டை அடுத்த மூணாங்கரடு முருகன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(35). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகின்றார். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது  முருகனின்  மனைவியின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.