இரத்தம் சிந்த வைக்க வந்த ஒருவரை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய ராணுவம்!

0
108

இந்திய எல்லைக்குள் ஊடுருவியை தாக்குதல் நடத்துவதற்காக வந்த பயங்கரவாதியை சுட்டு பிடித்த இந்திய ராணுவத்தை சார்ந்தவர்கள் அந்த பயங்கரவாதிக்கு அரிய வகை இரத்தமானஓ நெகட்டிவ் வகை ரத்தத்தை தானம் வழங்கி காப்பாற்றியுள்ளார்கள் இந்திய ராணுவத்தின் மனிதாபிமானத்தை பலரும் இதனால் பாராட்டியிருக்கிறார்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷோரா பகுதியில் சங்கார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சென்ற 21ஆம் தேதி 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்ததில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் படுகாயமடைந்த தபாராக் உசேன் என்ற பயங்கரவாதியை இந்திய ராணுவம் பிடித்தது. அதற்குப் பிறகு நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தனர்.

அதாவது சற்றேர் குறைய 32 வயது மதிக்கத்தக்க பயங்கரவாதி உசேன் தெரிவிக்கும் போது பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனுஸ் என்பவர் அனுப்பி நாங்கள் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வரந்தோம் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த எனக்கு அவர் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதற்காக இந்திய ராணுவத்தின் 2 நிலைகளுக்கு சென்று வந்துள்ளேன் என தெரிவித்தார்.

உசைன் பிடிபட்டது தொடர்பாக இந்திய ராணுவ பிரிகேடியர் ராஜீவ் நாயுடு தெரிவித்ததாவது, உசைனின் தொடை மற்றும் தோள்பட்டையில் 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்தம் வழிந்தோடியது சிக்கலான இந்த நிலையில், இருந்த உசேனுக்கு இந்திய ராணுவ வீரர்கள் 3 பாட்டில் வரையில் ரத்தம் கொடுத்தார்கள்.

உசைனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.அதன் பிறகு உசைனின் உடல்நிலை சீரானது. ஆனாலும் குணமடைய சில வாரங்களாகும் என தெரிவித்தார்.

மேலும் அவரை ஒரு பயங்கரவாதியாகவே நாங்கள் கருதவில்லை ஒரு நோயாளியை போல நினைத்து உசைனை காப்பாற்றவே சிகிச்சை வழங்கப்பட்டது.

ராணுவ வீரர்களின் ரத்தம் சிந்த வைக்க வந்த நபர் ஒருவருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் ரத்தம் கொடுத்தது அவர்களுடைய பெருந்தன்மை. ரத்த வகை மிக அறிய வகையான ஓ நெகட்டிவ் ஆகும் என அவர் தெரிவித்தார்.

நம்முடைய வீரர்கள் ரத்தத்தை சிந்த வைப்பதற்காக பயங்கரவாதியாக வந்த ஒருவனுக்கு ரத்தம் கொடுத்து அவருடைய உயிரை காப்பாற்றிய இந்திய ராணுவத்தின் மனிதாபிமானத்தை தற்போது பலரும் பாராட்டி வருகிறார்கள்.