“ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று பதிவிட்ட சேவாக்கை கிண்டல் செய்த பாகிஸ்தானியர்!! யோசிக்காமல் பதிலடி கொடுத்த சேவாக்!!

0
92
#image_title

“ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று பதிவிட்ட சேவாக்கை கிண்டல் செய்த பாகிஸ்தானியர்!! யோசிக்காமல் பதிலடி கொடுத்த சேவாக்!!

இந்த ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நம் இந்தியா ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 8 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து 8 போட்டிகளில் விளையாடிய தென் ஆப்ரிக்கா 6 வெற்றி மற்றும் 2 தோல்வி என்று 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இருக்கின்றது.

இந்நிலையில் நான்காவது இடத்திற்கு தற்பொழுது கடுமையான போட்டி நிலவி வருகிறது.
உலக கோப்பையின் 35-வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளுக்கும் இடையே அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கான கடும் போட்டி நிலவியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 401 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் தடுமாறியது. அப்துல்லா 4 ரன்னில் அவுட்டாண நிலையில் அதன் பின் விளையாடிய கேப்டன் பாபர் ஆஷம் மற்றும் பக்கர் ஜமான் ஜோடியால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிலேய்யே நிறுத்தி வைக்கப்பட்டது. மழைக்கு பின்னர் DLS முறைப்படி விளையாடிய பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து 4 வது இடத்திலும் பாகிஸ்தான் 5 வது இடத்திலும் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளதால் அந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அவ்வணி புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்த பகார் ஜமானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பகார் ஜமானை பலரும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகார் ஜமானை பாராட்டி ஜமான் பேட்டிங்கில் “ஜஜ்பே” குறையவே இல்லை என்று பதிவிட்டு இருந்தார்.

சேவாக்கின் இந்த கருத்து பதிவு வைரலாகத் தொடங்கியது. காரணம் அவர் “ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்றும், நாங்கள் ஜின்னாவிற்கு நன்றி கூற ஜஸ்பே ஒரு 13 வது காரணம் என்று சேவாக்கின் கருத்திற்கு பாகிஸ்தானியர் ஒருவர் கமண்ட் செய்து இருக்கிறார்.

மேலும் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னாவிற்கு நன்றி தெரிவித்து விட்டார் என்று சேவாக்கை அந்த நபர் கிண்டல் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

அந்த நபரின் கமண்ட்டுக்கு உடனடியாக பதில் அளித்த சேவாக் அவரகள், தொடர்ந்து கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?” என கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. உலக நாடுகளிடம் கடனாளியாக இருக்கிறது. அதேபோல் ஆண்களுக்கான ஐசிசி உலக கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதே கிடையாது. இதை தான் சேவாக் அவர்கள் கடனிலேயே வாழ்வதற்கு முதல் நன்றியா? இந்தியாவிடம் 8-0 என தோற்று கொண்டே இருப்பதற்கு இரண்டாவது நன்றியா?” என்று பதிவிட்டு தன் பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது சேவாக்கின் பதிவு வைரலாகி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் இது தான் சேவாக்கின் ஸ்டைல் என்றும் அவரின் அதிரடி என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.