பனம் பழம் சுட்டு சாப்பிடுங்கள்!! செலவு இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்!!

Photo of author

By Divya

பனம் பழம் சுட்டு சாப்பிடுங்கள்!! செலவு இல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறுங்கள்!!

கோடை காலத்தில் விளைச்சலுக்கு வரக் கூடியவை நுங்கு.இவை உடலுக்கு குளிர்ச்சியை அள்ளி தருபவை.இந்த நுங்கை பறிக்காமல் விட்டால் அவை முற்றி பனம் பழமாக மாறும்.

இந்த பனம் பழத்தின் பெயரை சொன்னாலே அதன் வாசனை தான் முதலில் நினைவிற்கு வரும்.இதன் சதைப்பற்று கண்ணை பறிக்கும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.உங்களில் பலர் இந்த பழத்தை சுட்டு ருசித்திருப்பீர்கள்.

பனம்பழத்தில் நீர்ச்சத்து,நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,புரோட்டின், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

பனம் பழத்தை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

1)உடல் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.

2)உடல் எலும்பு வலிமை பெறும்.

3)நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கும்.

4)செரிமானக் கோளாறு பிரச்சனை இருப்பவர்களுக்கு பனம் பழம் சிறந்த தீர்வாக இருக்கும்.

5)சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக நீங்கும்.

6)உடல் சோர்வை போக்கி புத்துணர்வை கொடுக்கிறது.

7)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

8)குமட்டல்,வாந்தி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

9)ஆண்மை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.