மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்.. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..!

Photo of author

By Janani

ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் அந்த பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.நேற்றிரவு அவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.அதன்பின்னர், அவர் வீட்டில் இருந்து கிளம்பி ராகவேந்திரா நகர் பாலம் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த பாலத்தின் அருகே மறைந்துள்ள மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டால் படுகாயமடைந்த அவர் நடு ரோட்டில் காயங்களுடன் கிடந்துள்ளார்.அப்போது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.