உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளதா? அப்போ இந்த பொருளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!

0
121

பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். அவர்கள் கறிவேப்பில்லையை உணவில் சேர்த்து கொண்டால் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வளிக்கும். ஆனால், தாளிக்கும் கறிவேப்பில்லைகளை உணவில் இருந்து ஒதுக்கி விடுவோம். அதனை பொடியாக செய்து உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையானவை :

கறிவேப்பிலை – 2 கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன.

செய்முறை :

கறிப்பில்லையை நன்றாக கழுவி கொள்ளவும். அடுப்பில், கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதன்பின்னர், மிளகாயை போட்டு வறுத்தெடுத்து கொள்ளுங்கள். அதன்பின், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.

இறுதியாக கறிவேப்பில்லையை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். அவற்றை ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளுங்கள். இந்த பொடியை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளலாம்.

இதனை இட்லி, தோசையுடன் சூடான சாதத்தில் நெயும் கறிவேப்பிலை பொடியும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.