ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!?
ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் இந்த பன்னீர் அல்வா எவ்வாறு தயார் செய்வது என்ன பொருள்கள் தேவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பன்னீர் அல்வா செய்ய தேவையான பொருள்கள்…
* பன்னீர்
* பால்
* சர்க்கரை
* நெய்
* ஏலக்காய் தூள்
* பாதம் பருப்பு
பன்னீர் அல்வா தயார் செய்யும் முறை…
முதலில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற.வைத்து அதில் கடாய் வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்க்கவும். நெய் உருகிய பின்னர் அரைத்த பன்னீரை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
பன்னீர் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுத்து வெளிர் பழுப்பு நிறமாக மாறியதும் அதில் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பன்னீர் மற்றும் பால் இரண்டையும் நன்கு கொதிக்க வைத்து அது வெந்த பின்னர் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை சேர்த்து பின்னர் இதை நன்கு கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பால் முழுவதும் வற்றும் வரை அல்வாவை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள பாதாம் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். சிறிது ஆறியதும் இந்த பன்னீர் அல்வாவை சாப்பிடலாம்.
இதன் முலம் கிடைக்கும் நன்மைகள்…
* பன்னீரில் உடலுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், மெக்னீசியம், வைட்டமின் எ, வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் இதன் மூலமாக நம் உடலுக்கு இந்த சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றது.
* பன்னீரில் அதிகளவு கால்சியம் இருப்பதால் இதை சாப்பிடும் பொழுது நம்முடைய பற்களும் எலும்புகளும் வலிமை பெறுகின்றது.
* பன்னீரை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு ஏற்படுகின்ற உடல் வலி குறைகின்றது. மேலும் மூட்டு வலியும் குறைகின்றது.
* பன்னீர் நமது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கின்றது.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பன்னீரை தினமும் சாப்பிடலாம்.
* பன்னீர் நமக்கு பக்கவாதம் ஏற்படாமல் பாதுகாக்க உதவி செய்கின்றது.
* சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பன்னீரை தினமும் சாப்பிடலாம்.