அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்:! ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ் அவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தார், அதன் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஓபிஎஸ் அவர்கள் வந்தபோது அவர்களின் உடன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது அஇஅதிமுக வின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஇஅதிமுக தொண்டர்கள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

https://twitter.com/OfficeOfOPS/status/1574628921647124481/photo/1