சருமத்திற்கு பல நன்மைகளை தரும் பப்பாளி!!! இதில் அல்வா செய்வது எப்படி!!?
நமது சருமத்தை பாதுகாத்து பல நன்மைகளை தரக்கூடிய பப்பாளியில் அல்வா தயார் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த பதிவில் பப்பாளியின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பப்பாளி நமது சருமத்திற்கு பெரிதும் நன்மை அளிக்கின்றது. பப்பாளியில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், செம்பு, மாங்கனீசு, பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் உள்ளது. பல நன்மைகளை தரும் பப்பாளியில் அல்வா தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
பப்பாளியில் அல்வா செய்ய தேவையான பொருட்கள்…
* பப்பாளி
* நெய்
* பால்
* ஏலக்காய் தூள்
* முந்திரி, பாதாம்
* சர்க்கரை
செய்முறை…
முதலில் பெரிய பப்பாளி பழத்தை எடுத்து தோல் நீக்கி சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் காய் வைத்து நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நெய் சூடானதும் நறுக்கி வைத்துள்ள பப்பாளி பழத் துண்டுகளை அதில சேர்த்து சிறிது வதக்கிக் கொள்ள வேண்டும் பின்னர் பப்பாளி துண்டுகளை மடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த பப்பாளியுடன் பால் சேர்த்துக் கொண்டு நன்கு கலந்துக் கொண்டே இருக்க வேண்டும். பால் வற்றும் வரை இதை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் இதில் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
இதை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் சில நிமிடங்கள் கழிந்து ட்ரை பூரூட்ஸ் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை கிளிறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சில நேரம் கழிந்து அல்வாவில் இருந்து நல்ல வாசனை வரத் தொடங்கும். அப்பொழுது அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். இதோ சுவையான சத்தான பப்பாளி அல்வா தயார். இதை நீங்கள். உலர் பழங்களை கொண்டு அலங்கரித்து சாப்பிடலாம்.
பப்பாளி மூலம் கிடைக்கும் நன்மைகள்…
* பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி துரிதமாகும்.
* பப்பாளி காயை கூட்டாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும்.
* பப்பாளியை எடுத்துக் கொண்டால் பற்கள் உறுதியாகும். எலும்புகள் வளர்ச்சி அடையும்.
* நன்கு பழுத்த பப்பாளி பழத்தை பிசைந்து தூளாக்கி அதில் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் தேய்க்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர் குறைந்தளவு சூடான தண்ணீரால் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கும். முகம் பொலிவு பெறும்.
* பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
* தொடர்ந்து பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறைந்து விடும்.
* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாக்குப் பூச்சிகள் அழிந்து விடும்.
* பப்பாளிக் காயின் பாலை எடுத்து வாய்ப்புண்கள் மீது தேய்த்தால் வாய்ப்புண் ஆறும். அதே போல கை கால்களில் புண்கள் இருந்தாலும் அதன் மேல் தேய்த்து விட்டால் அந்த புண்களும் ஆறும்.