ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன் இவர்தான்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையை தனது தலைமையில் வென்றார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச். கடந்த ஒரு ஆண்டாக அவர் பேட்டிங் பார்ம் சரியில்லாத காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
தற்போது நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறார். இதையடுத்து ஆஸி அணிக்கு யார் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸுக்கு ஏற்கனவே டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் உண்டு.
அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அக்டோபர் 18 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் அறிவிக்கப்பட்ட முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
“நான் பின்ச்சின் கீழ் விளையாடுவதை மிகவும் ரசித்தேன், மேலும் அவரது தலைமையிடமிருந்து மகத்தான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவை அணியை வழிநடத்துவதற்கு உதவியாக இருக்கும். ஒரு நாள் அணியில் அதிக அனுபவத்துடன் விளையாடுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம்” என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.