தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு! அனைத்து கடைகளும் 12 மணி வரை!
கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது அதிக அளவு பரவி வருகிறது.இந்தியா கொரோனா தொற்றின் பாதிப்பிலன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.குறிப்பாக மகராஷ்டிரா,டெல்லி,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.அதனால் அம்மாநில அரசு,மதிய அரசுடன் கலந்தோசித்து கட்டுப்பாடுகளுடைய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் தற்போது மே 6-ம் தேதி முதல் தமிழ்நாட்டிலும் குறிப்பிட சில கடைகள் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.
தனியார் அலுவலங்கள்,அரசு அலுவலங்கள் பணிபுரியும் ஊழியர்கள் 50% மட்டுமே பணிபுரிய வேண்டும்.பேருந்துகள்,டாக்ஸிகளில் பயணம் செய்வோர் 50% இருக்கைகளுடன் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.மளிகை,காய்கறி கடைகள் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.வணிக வளாகங்களிலுள்ள காய்கறிக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.தேநீர் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.உணவகங்களில் சாப்பிட தடை விதித்துள்ளனர்.பார்சல் வசதிக்கு அனுமதி அளித்துள்ளனர்.
அதேபோல இரவு ஊரடங்கின் போது மெடிக்கல் எமர்ஜென்சி போன்ற தேவையான காரணங்களுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதித்துள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 20,956 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.இது நாளடைடைவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.மக்கள் அனைவரும் அதை பின்பற்றி கடைபிடிக்க வேண்டும்.