திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம்! பரபரப்பில் அண்ணா அறிவாலயம்!

0
106

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இரு திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி சுமார் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. திமுக மட்டுமே தனித்து சுமார் 126 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் விளங்குகிறது.சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர பிறப்பதால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் முறைப்படி திமுக சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் மு க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. நோய் தொற்று பரவ காரணமாக, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஸ்டாலின் வெற்றி பெற்ற அன்றே தெரிவித்திருந்தார்.

அதோடு ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் முதல்வராகப் பொறுப்பேற்க இருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல முதன்முறையாக சட்டசபை தேர்வாகி இருக்கின்றன உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.