சசிகலா தொடர்பாக எடப்பாடியின் மனநிலை என்ன?

0
80

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்ற நிலையில், பத்து வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமர இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சசிகலா அரசியலில் இருந்தால் அது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனாலும் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார்.ஆகவே நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அதிமுக களமிறங்கியது. ஆனாலும் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்து விட்டது.
இதனால் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா அல்லது அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால் மறுபுறமோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் அதிமுக என்ற கட்சியே இல்லை என்ற நிலை வந்து விடும் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் இவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாக சட்டசபைக்கும் நுழைந்திருக்கிறது அதிமுக என்பதில் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உயிரிழந்த சமயத்தில் ஜெயலலிதாவிற்க்கே தோல்வி ஏற்பட்டது. அப்படி இருக்க தற்போது எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் ஒரு சாதாரண மனிதராக இருந்து இந்த கட்சியை வழிநடத்தி இந்த அளவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்து எதிர்க்கட்சியாக அமரும் அளவிற்கு கொண்டு வந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவை விட ஒரு படி மேல்தான் என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அவருக்கு எம்ஜிஆரின் முழு ஆதரவு இருந்தது அதன் காரணமாக, எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த சமயத்திலேயே ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தார். அதோடு அவர்தான் அடுத்த அரசியல் வாரிசு என்ற ஒரு நிலை தமிழகத்தில் அப்போது இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நிலையோ அப்படி கிடையாது.

அப்படி இருக்கும்போது அவர் பொறுப்பேற்று தலைமை வகித்த அதிமுக ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் புதைந்து போய் விடும் என்று நினைத்த சமயத்தில் இப்படி ஒரு வெற்றியை தேடிக் கொடுத்து ஒரு பலமிக்க எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய வைத்திருக்கிறார் எடப்பாடிபழனிசாமி அந்தவகையில் அவரை பாராட்டியே தீர வேண்டும்.
ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் மறுபடியும் சசிகலா அரசியலுக்கு வருவரேயானால் அவரை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வாரா என்பது தற்போது பலரின் கேள்வியாக இருந்துவருகிறது.