பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!

0
86

 

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!!

உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் ஆகும்.இதற்கான பணியின் பெயர் உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் வேலை.இதற்கான காலியிடங்கள் ஒன்று மட்டுமே.உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றுநர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக கலெக்டர் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.பணி முன் அனுபவமாக கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

மேலும் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

 

author avatar
Parthipan K