பயணிகள் அவதி! திடீரென தாமதம் ஆன ரயில்கள்!
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால்உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அந்த தகவலின் படி அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வந்தது.
கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்தது.மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.கனமழையின் காரணமாக சென்னை மீனபாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்படும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதனையடுத்து மதுரையில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாமதமாக வருகின்றது.அதனையடுத்து விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.அந்த தாமதத்தினால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.