தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்! 

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இடங்களுக்கு செல்லும் ரயில் வழிகள் மாற்றம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை வரும் திங்கள்கிழமைகளில் கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11மணிக்கு வாரந்திர வண்டி எண் 07385 என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.இந்த ரயில் புதன் கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே போல் நவம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை புதன்கிழமையில் கோட்டயத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு வாராந்திர வண்டி எண்(07386) வியாழக்கிழமை இரவு 8.30  மணிக்கு விஜயபுரா சென்றடையும் என அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த ரயில் எர்ணாகுளம் டவுன், பாலக்காடு ,கோவை ,திருச்சூர்,திருப்பூர் ,ஈரோடு ,சேலம் ,பங்காரப் பேட்டை ,கிருஷ்ணராஜ புரம் ,தும்கூர் ,திப்தூர் ,பிரூர் ,ஹரிஹர் ,ராணிபென்னூர்,பாகல்கோட் ,அமல்மட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே இயக்கம் அறிவித்துள்ளது.