பயணிகளின் டிக்கெட்டுக்கான கட்டணம்.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!  

0
194
Payment for passenger tickets.. The government issued an action order to bus drivers and operators!
Payment for passenger tickets.. The government issued an action order to bus drivers and operators!

பயணிகளின் டிக்கெட்டுக்கான கட்டணம்.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

வரும் மாதம் 13ம் தேதி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு ஆனது அதனை கண்டு கொள்ளவில்லை. அதனால் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் தர்ணா முறையில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கூடுதலாக பணிபுரிந்தும் அவர்களுக்கு உரிதான சம்பளம் வழங்குவதில்லை. அவ்வாறு கூடுதலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.இச்சமயத்தில் போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

அதில், சமீபத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மீது பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதனால் இனி வரும் நாட்களில் பயணிகளிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் பேருந்தில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் சரியான நேரத்தில், கூறிய வலிகளில் மட்டுமே போக வேண்டும்.

பேருந்து நிறுத்தம் உள்ள இடங்களில் கட்டாயம் பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். அதேபோல பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும். பயணிகளிடமிருந்து உரிய பயண சீட்டுக்கான பணத்தை மட்டுமே வாங்க வேண்டும். அதற்கு அதிகமான பணத்தை வாங்க கூடாது. தற்பொழுது வருவாயானது மிகவும் குறைந்து விட்டது இதற்கான காரணம், தொழிலாளர்களின் ஒழுங்கீன செயல்தான். இதனை தவிர்க்க இந்த கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Previous articleபயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! 
Next articleகல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்