பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து! 

0
152
Attention passengers! 14 flights from Chennai to this place canceled!
Attention passengers! 14 flights from Chennai to this place canceled!

பயணிகளின் கவனத்திற்கு! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து!

கடந்த வாரம் முதலில் இருந்தே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதனால் தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமறை அறிவித்து  அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்தனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

இந்நிலையில் வங்களா விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை -அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் வரும் 18 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

போர்ட்பிளேர் விமான நிலையத்தில் ஓடுபாதை பாரமரிப்பு பணிகள் காரணமாக விமான சேவை மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போர்ட் விமான நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போர்ட் பிளேரில் உள்ள வீர சவார்க்கர் விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே உள்ளது.

போர்ட் பிளேருக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் அந்தமானில் இருந்து கொல்கத்தா ,விசாகப்பட்டினம் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K