வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!!
ஒரு பைசா கூட செலவு இல்லாமல்வவீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து பெடிக்யூர் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் அனைவரும் கைவிரல் நகங்கள், கால் விரல் நகங்கள் ஆகியவற்றை பரமாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கால் நகங்கள், கை நகங்கள் ஆகியவற்றிற்கு நெயில் பாலிஷ் அடித்து எப்பொழுதும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
எனவே மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை பியூட்டி பார்லர் சென்று பெடிக்யூர் செய்வார்கள். இதனால் பணம் அதிகளவில் செலவாகும். இந்த பதிவில் ஒரு பைசா கூட செலவில்லாமல் பெடிக்யூர் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெடிக்யூர் செய்யும் முறை…
* பெண்கள் முதலில் கால்களின் விரல்களில் உள்ள நகங்களை முதலில் சரியாக வெட்ட வேண்டும்.
* பின்னர் கால்களின் விரலில் உள்ள நகங்களில் போடப்பட்டிருக்கும் நெயில் பாலிஷை ரிமூவரின் உதவியோடு நகங்களில் உள்ள பழைய நெயில் பாலீஷை அகற்ற வேண்டும்.
* அதன் பிறகு கால்களில் கிரீம் அல்லது தேவைக் கொண்டு முழுவதுமாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின்னர் தண்ணீரை இளஞ்சூடு செய்து அதில் எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரில் கால்களை வைக்க வேண்டும். பின்னர் கால்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
* அப்படியே வீட்டில் இருக்கும் பழைய பிரஷ்களை கொண்டு நகங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
* கால் விரல்களில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதை எலுமிச்சை துண்டுகளை கொண்டு பாதிப்புகள் இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்.
* அதன் பின்னர் கால்களை சர்க்கரையை கொண்டு ஸ்கிரப் செய்ய வேண்டும். அதன் பின்னர் சூடான தண்ணீரில் கால்களை நினைத்து எடுத்துவிட்டு வேண்டும்.
* இறுதியாக கால்களில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடும். மேலும் பாதங்களில் அழுக்குகள் சேர்வது தடுக்கப்பட்டு பாதங்களில் தொற்றுக்கள் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.