வங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது தினமும் ஏராளமான சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பழையபடி கொண்டு வர வேண்டும் என்று அனைத்து வங்கி தரப்பினரும் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.
எனவே, இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டமானது, இந்திய வங்கிகள் சங்கம், யுனைடைட் போரம் மற்றும் வங்கி யூனியன்கள் ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நூறு சதவிகிதம் அகவிலைப்படி ஓய்வு பெற்றவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய தொகையானது மாதம்தோறும் ரூபாய் 800 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களின் நலனுக்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஒய்வூதியதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.