மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

Photo of author

By Pavithra

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

Pavithra

மக்களே எச்சரிக்கை! நீலகிரியில் பரவும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் ஏற்பட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உள்ள முதுமலை சுற்றுவட்டார வனப்பகுதியில் திடீரென்று 20-கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தது.இதனால் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த பன்றிகளின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மாதிரியின் ஆய்வு முடிவானது நேற்று வந்த நிலையில், திடீரென்று இருந்த 20 பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து பன்றிகள் ஏதும் ஊருக்குள் சென்று விடாதவாறு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வனப்பகுதியில் உள்ள பன்றிகளையும் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.