தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

0
79

தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

பள்ளி செல்லாமல் தனிப்பட்ட முறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு தட்கல் மூலம் இன்று விண்ணப்பதிவு தொடங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டு 2022 -2023 ஆம் ஆண்டுக்கான  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன.இந்த தேர்வுகளில் பங்கேற்கும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கி நேற்று முன்தினம் ஜனவரி 3-ஆம் தேதி முடிவடைந்தது.

இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள் இன்று தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் துறையின் சேவை மையத்திற்கு சென்று தத்கல் சிறப்பு திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 1 தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள்  பிளஸ் டூ தேர்வு எழுதவும் மற்றும் பிளஸ் 1 பாடத்தில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்பு முடித்தவுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கும் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கும் தேர்வுகள் எழுத விண்ணப்பிக்கலாம்.மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குனரக மையங்களுக்கு நேரில் சென்று வேண்டிய விவரங்களை பெற்று விண்ணப்பங்கள் அனுப்பலாம்.இதைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு dge1.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.