கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர்.
இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார்.
மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் முப்பெரும் விழாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
இந்த நாட்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் தற்போது வேறு மதங்களைச் சேர்ந்த இரண்டு பேர் வின்ச் ரயில் மூலம் உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.
இதைப்பார்த்த கோவில் நிர்வாகத்தினர் இவர்களை தடுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த நிகழ்வு குறித்து அமைப்புகள் கோவில் நிர்வாகத்தினரிடம் கேள்வியை எழுப்பியது.
இதனால் தற்போது கோவில் நிர்வாகம் சார்பாக போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று போடப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னரே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கோவிலின் படிகளில் கற்பூரம் ஏற்றக்கூடாது, லுங்கி மற்றும் கைலிகளை அணிந்து சன்னிதானத்திற்குள் வரக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.
அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பாக இந்து மக்கள் மட்டுமே கோவில்களுக்குள் வர வேண்டும் என்று கூறி உள்ளனர். வடமாநிலங்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் இருப்பது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.