மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

0
154

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது இதனால் இவற்றை 10 நாட்களுக்குள் செய்து முடிக்குமாறு மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதால், விரைவில் முடிக்கப்பட வேண்டும் என அனைத்து மின் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மொத்த இயந்திரங்களும் பகுதியாகப் பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஜூன் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. மாவட்டங்கள் வாரியாக அனைத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு இந்த பணி விவரங்கள் அனுப்பப்பட உள்ளது. அதை போல் பராமரிப்பு பணிகள் நடக்கும் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே 2 மற்றும் 3 மணி நேரம் முதல் மின்தடை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் தொடர்பாக அரசு மூன்று விதமான பதிவுகளை மக்களுக்கு அளித்தது. கடந்த மே மாதம் செலுத்திய மின் கட்டணம் அல்லது கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் மின் மீட்டர் அளவை குறித்து அதிகாரிகளுக்கு புகைப்படம் அனுப்பினால் கட்டணத்தை கணக்கிட்டு மின் கட்டணத்தை அனுப்பி வைப்பார்கள் என்று சொல்லப்பட்டது.

மொத்தம் பத்து லட்சத்திற்கும் மேல் மின் கட்டணம் தொடர்பாக புகார் வந்த நிலையில், அவர்களின் புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Previous articleகாதலிப்பதாக கூறி இளைஞன் செய்த செயல்! அதிர்ச்சி அடைந்த தாய்!
Next articleகேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! – தமிழக அரசு!