கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! – தமிழக அரசு!

0
104

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை தொழில்நுட்பவியல் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, இல்லை அதை மக்கள் மாற்ற நினைத்தாலோ அரசு செட்டாப் பாக்சை உரிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் மக்கள் வழங்க வேண்டும், அந்த செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர்.

தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி இணைப்புகளை தமிழகம் முழுவதும் வழங்கி வருகிறது. தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை பெற நினைக்கும் பொது மக்கள் அந்தப் பகுதி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் சேவையை பெற்றுக் கொள்ளலாம். 200க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது தமிழக அரசு கேபிள் டிவி. இந்த சேனல்களுக்கு கட்டணமாக குறைந்தபட்ச தொகையை வாங்கி வருகிறது. மற்ற தனியார் கேபிள் டிவி கட்டணத்தை விட இது குறைந்த தொகை ஆகும்.

மேலும் அரசின் சேவையை கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி 180042 52911 எண் மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஒரு சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக அரசிடமிருந்து செட்டாப் பாக்ஸ்களை வாங்கிக்கொண்டு அதை பொதுமக்களுக்கு தராமல் தனியார் செட்டாப் பாக்ஸ்களை மக்களுக்கு கொடுத்து கூடுதல் விலையை பெற்று ஏமாற்றி வருகின்றார்கள் என புகார் எழுந்துள்ள நிலையில் இந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வேண்டுகோளாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, அல்லது கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, சந்தாதாரர் வேறு ஒரு இடத்திற்கு மாறி சென்றாலோ, அல்லது வேறு நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ, நீங்கள் அரசின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் ஆகியவற்றை அந்த பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் இடம் வழங்கிவிட வேண்டும் அதாவது திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மக்கள் ஒப்படைத்த கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் .அப்படி ஒப்படைக்காத நிலையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தொழில்நுட்பவியல் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

author avatar
Kowsalya