18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்!

0
175
People under the age of 18 are prohibited from using cell phones! Penalty for violation!
People under the age of 18 are prohibited from using cell phones! Penalty for violation!

18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே சிறிய செல்போனிற்குள் அடங்கி விட்டது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் இருக்கும் பொருள் என்றாலே அது செல்போன் தான்.அனைவருமே அந்த சிறிய பொருளிற்கு அடிமையாகி விட்டனர்.

முன்னதாக பள்ளி செல்லும் குழந்தைகள் கையில் புத்தகங்கள் இருந்தது ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் கையில் செல்போன் மட்டுமே இருகின்றது.செல்போன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் செல்போன் வைத்திருப்பதை பெற்றோர் கண்டித்தால் மனஉளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் யவத்மாலில் உள்ள ஒரு கிராமத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

சிறுவர்கள் ,சிறுமிகள் தற்போது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதற்கும் ,சமூகவளைதலங்களில் பரவும் செய்துகளுக்கும்  அடிமையாகி வருகின்றனர்.அதனை தடுக்க கிராம சபையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த முடிவின் தொடக்கத்தில் பல சிரமங்கள் இருந்தாலும் இறுதியில் அதிக பயனளிக்கும் என கூறினார்கள்.

அந்த தீர்மானமானது 18 வயதிற்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது.இந்த நடவடிக்கையின் முதலில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் என இருவருக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும்.அந்த கவுன்சிலிங் முடிந்த பிறகும் சிறுவர்கள் செல்போன் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகள் மீண்டும் படிக்க தொடங்க வேண்டும்.செல்போன்களால் திசைதிருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருக்கும் என தெரிவித்தனர்.இந்த நடவடிக்கை முதன்முதலில் மராட்டியத்தில் உள்ள கிராமத்தில் தான்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை உதரணமாக கொண்டு மற்ற கிராமங்களிலும் முயற்சி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleவிவசாயிகள் கவனத்திற்கு.. இனி இது செயல்படாது! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! 
Next articleஉங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளதா? அப்போ இந்த பொருளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!