ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகளை மீறும் மக்கள்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கடுமையான சட்டங்களை போட்டாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி வருகின்றனர் மெல்பர்ன் நகரில் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அங்குள்ள மக்கள் வேண்டுமென்றே  கட்டுப்பாடுகளை மீறிவருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் போராடி வந்தாலும் சிலர் காவல்துறையையும் தாக்குகின்றனர். அங்கு விக்டோரியா மாநிலத்தில் தான்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகம்.