சாப்பிட்டவுடன் Toilet போகும் நபரா.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இனி ஆயுசுக்கும் பிரச்சனை வரவே வராது!!

0
116

சாப்பிட்டவுடன் Toilet போகும் நபரா.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இனி ஆயுசுக்கும் பிரச்சனை வரவே வராது!!

உடலில் செரிமானம் மட்டும் சீராக செயல்படவில்லை என்றால் பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்திக்க வேண்டி இருக்கும். முதலில் நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்கள் எதுவும் நமது உடலுக்கு சென்று சேராது.

இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அனைத்துவித நோய்களும் வர மூல காரணமாக அமைந்து விடும். குறிப்பாக ஒரு சிலருக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பழக்கம் இருக்கும்.

குடல் எரிச்சலால் இவ்வாறு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம் தான். இதனையெல்லாம் தடுக்க முதலில் நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

அப்பொழுது தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நேரடியாக உடலுக்கு சென்றடையும். பின்பு அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அதேபோல நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கொண்டு காப்பி மற்றும் தேனீர் அருந்துவதை முற்றிலுமாக விடுவது நல்லது. காரசாரமான உணவுகளை உண்பதையும் தவிர்த்து விட வேண்டும்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து உணவு உண்டபின் மலம் கழிக்கும் உணர்வை தடுக்க இதனை பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

சுக்கு. 10 கிராம்

நெல் பொறி. 5 கிராம்

நறுக்கு மூலம் பொடி. 5 கிராம்

திப்பிலி. 5 கிராம்

மிளகு. 3 கிராம்

வெற்றிலை 2

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை அடுப்பில் வைத்து எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இதை ஒரு கிளாசில் வடிகட்டி கொள்ள வேண்டும்.

உணவு உண்ட பின் மலம் கழிக்கும் உணர்வு உள்ளவர்கள் இதனை காலை மற்றும் மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் 10லிருந்து 15 மில்லி குடித்து வர நிரந்தர தீர்வு காணலாம்.

Previous articleஇந்த 1 இலை இருந்தால் போதும்!! தாங்கவே முடியாத பல் வலியை 5 நிமிடத்தில் சரி செய்யலாம்!!
Next articleஇந்த ஒரு டிரிங்க் குடியுங்கள் தைராய்டு பிரச்சனையை ஆயுசுக்கும் வரவிடாமல் செய்யலாம்!!