டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

0
139

அமெரிக்காவின் நற்பெயர் மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாகக் கருத்தாய்வு கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பியூ ஆராய்ச்சி மையம் கருத்தாய்வை  நடத்தியது. 13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர். அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதிகபட்சம் 25 விழுக்காட்டினர் மட்டுமே டிரம்ப் மீது நம்பிக்கை தெரிவித்தனர்.

 

Previous articleஅரசு மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் !!
Next articleஉலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!