அறுவை சிகிச்சையால் கண் பார்வையை இழந்த மக்கள்!! அரசு மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!
ராஜஸ்தானில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவமனை தான் சவாய் மான் சிங் மருத்துவமனை. இதனை எஸ்எம்எஸ் மருத்துவமனை என்று அழைப்பார்கள்.
ஜூன் மாதம் ராஜஸ்தான் அரசாங்கத்தின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின் கீழ் கண்புரை நோயை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை இந்த மருத்துவமனையில் பலரும் செய்து கொண்டனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பல பேருக்கு கண் பார்வை போய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் கண்களில் பயங்கரமான வலி இருப்பதாக கூறி உள்ளனர்.
இதனால் மருத்துவமனை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் சிகிச்சைக்கு வரும்படி கூறி உள்ளனர். மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் கூட அவர்களுக்கு இழந்த கண்பார்வையை மீட்டு தர முடியவில்லை.
இது குறித்து மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நோயாளி ஒருவர் கூறி இருப்பதாவது, ஜூன் 23 தேதி அன்று எனக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதனையடுத்து ஜூலை ஐந்தாம் தேதி வரை எனக்கு கண் பார்வை தெரிந்தது. ஆனால் ஜூலை ஆறாம் தேதிக்கு பிறகு கண்பார்வை போய் விட்டதாக கூறி உள்ளார்.
இதன் பிறகு திரும்பவும் அறுவை சிகிச்சை செய்தும் கூட எனக்கு கண் பார்வை கிடைக்கவில்லை என்று குற்றம் கூறி உள்ளார். இவரை அடுத்து கண் பார்வையை பறிகொடுத்த சாந்தா தேவி என்பவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், தொற்று நோயின் காரணமாக கண் பார்வை போய் விட்டது என்றும், இதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும், கூடிய விரைவிலேயே சரியாகி விடும் என்றும் கூறி உள்ளார்.
மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று கூறி மேலும், நோயாளிகளிடமிருந்து புகார்களை பெற்றப் பிறகு விசாரணை நடந்து வருவதாகவும் கூறி உள்ளார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் இது போன்ற சிகிச்சை குறைபாட்டால் 18 பேர் கண் பார்வையை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.