மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

0
178

மக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!

 

இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலிருந்தே இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கின்றன.இந்நிலையில் குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது.

எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோமோ அந்த அளவுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது.

இவ்வாறு படியும் கொழுப்புகள் பிளேக்ஸ் என அழைக்கப்படுகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது. மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.அதன்படி பொதுவாக நம் அன்றாட வாழ்வில் காலையில் எழுந்தது முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும் வரை நாம் நம் உடலை எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அது அமைகிறது.உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

மனஅழுத்தம் வராமல் சூழ்நிலையை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.மேலும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுபொருட்களை குறைக்க வேண்டும்.காய்கறிகள் மற்றும் பழ வகை உணவு பொருட்களை சேர்க்க வேண்டும்.மனஅழுத்தம் போக்கும் யுத்திகளை கையாண்டால் இதயத்திற்கு வரும் பலவிதமான நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.

Previous articleகோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் உள்ளன?
Next articleஎது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!