எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

0
165

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.

 

சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,

 

1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் ஒலிக்கும், கல்லுக்குள் இசை வாத்தியங்களை வைத்தார்களா? ஏழு ஸ்வரங்களை கல்லுக்குள் அடக்கிய இது உலக அதிசயம்.

 

2. திருப்பூரில் உள்ள குண்டட வடுகநாத பைரவர் கோயிலில் அன்னையின் வயிற்றில் இருக்கும் குழந்தை இந்த மாதத்தில் இந்த வடிவத்தில் இந்த இருக்கும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடித்து வைத்தார்களே அது உலக அதிசயம். எந்த ஒரு நுட்பமும் இல்லாமல் அதை அவர்களால் எப்படி அறிந்திருக்க முடியும்.

 

3. சில கோயில்களில் நேரடியாக சிலைகளில் மீது கருவறைகளில் உள்ள சிலைகளில் மீது சூரிய ஒளி நேரடியாக படும்படி வடிவமைத்து உள்ளனரே. அதை என்னவென்று கூறுவது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தேதியில் மாலை போல் வந்து விழுவது உலக அதிசயம் இல்லையா? வட சென்னையில் வியாசர்பாடியில் ஈஸ்வர சிவன் கோயிலில் வேலையும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி மாலை போல் வந்து விழும். இந்த சில எவ்வளவு பழமையானது என்று தெரியுமா? ஐந்தாயிரம் ஆண்டுகள்.

 

4. ஓசோன் படலத்தைப் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயிலில் வடிக்கப்பட்டுள்ளது என்றால் அது உலக அதிசயம் அல்லவா? ஓசோன் படலம் எப்படி இருக்கும் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என சிற்பங்களில் கூறியுள்ளது நம் முன்னோர்களின் திறமை இல்லையா?

 

5. யாழி என்ற பழங்கால விலங்கு ஒன்றை வடிவமைத்திருப்பது உங்களுக்கு தெரியும்.

அதன் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அதை நம்மால் உருட்ட முடியும். ஆயிரம் மல்யுத்த வீரர்கள் சேர்ந்து வெளியே எடுக்க முயற்சித்தாலும் அவர்களால் முடியாது இது உலக அதிசயம்.

 

6. சோழபுரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கிணறு இருக்கும். அந்த கிணற்றின் அருகே ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். அந்த சிற்பத்தின் வாயில் உள்ளே ஒரு கதவு இருக்கும். அதில் உள் நுழைந்தால் கிணற்றில் உள்ளே இறங்கி குளிக்கலாம். கிணற்றின் உள்ளே இருந்து மேலே உள்ளவர்களை பார்க்கலாம். மேலே இருந்து யார் குளிக்கிறார்கள் என்பதை யாராலும் பார்க்க முடியாது. அந்த கால ராணிகள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்டதே இவை. இவை உலக அதிசயம் இல்லையா?

 

7. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் சந்திரகாந்தக்கற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிருமாம். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்குமாம். இவை உலக அதிசயம் இல்லையா?

இன்னும் எண்ணிலடங்கா அதிசயங்களை நமது முன்னோர்கள் விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதை பேணி காத்து தமிழ் பண்பாட்டை வளர்ப்போம்.

author avatar
Kowsalya