சபரிமலைக்கு வந்த பெண்களை பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய பக்தர்கள்: பெரும் பரபரப்பு

Photo of author

By CineDesk

சபரிமலைக்கு வந்த பெண்களை பெப்பர் ஸ்ப்ரே அடித்து விரட்டிய பக்தர்கள்: பெரும் பரபரப்பு

சபரிமலை கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபட கருப்பு உடை மற்றும் மாலை அணிந்து வந்த பெண்கள் சிலரை ஐயப்ப பக்தர்கள் பெப்பர் ஸ்பிரே மற்றும் மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து விரட்டியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கேரளாவைச் சேர்ந்த ஐந்து பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்காக கொச்சி காவல்நிலையத்தில் அனுமதி பெற வந்தனர். அவர்கள் அங்கு அனுமதி பெற்ற பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு தயாராக இருந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் திடீரென அந்தப் பெண்கள் மீது மிளகாய் பொடி மற்றும் பெப்பர் பொடி தூவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்த வீடியோக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை தடுக்கும் ஒரு சில அமைப்பினர் இவ்வாறு செய்து வருவதாகவும் இதனை அடுத்து காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் பேரில் பெப்பர் ஸ்பிரே அடித்த இரண்டு பேர்களை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்

https://twitter.com/SnehaMKoshy/status/1199162405386768384

சபரிமலைக்குச் சென்ற பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவத்திற்கு மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால்தான் பெண்கள் சபரிமலைக்கு செல்கின்றனர் என்றும், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது போலீசாரின் கடமை என்றும், போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே இவ்வாறு ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது கண்டிக்கத்தக்கது என்றும் மகளிர் அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.