மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

0
68

மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாஜக அரசு பொறுப்பேற்றது. அந்த அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு ஆதரவு அளித்ததால் பெரும் திருப்பம் ஏற்பட்டது

இந்த நிலையில் முதல்வர் பட்னாவிஸ் அரசுக்கு எதிராக சிவசேனா தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக இடைக்கால சபாநாயகர் ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், அவரது தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் உறுப்பினராக பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

இதனையடுத்து இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மறைமுகமாக நடத்தக்கூடாது என்றும், அதுமட்டுமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

ஏற்கனவே நேற்று சிவசேனா கூட்டணிக்கு 162 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை அக்கூட்டணியினர் நிரூபித்த நிலையில் மீதி உள்ள 126 எம்எல்ஏக்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

author avatar
CineDesk