Perfect டீ.. இப்படி போட்டு குடித்து பாருங்கள்!! பேக்கரி டேஸ்ட்க்கு இருக்கும்!!

0
40
#image_title

Perfect டீ.. இப்படி போட்டு குடித்து பாருங்கள்!! பேக்கரி டேஸ்ட்க்கு இருக்கும்!!

தினமும் காலையில் டீ அல்லது காபி குடித்தால் தான் ஒரு சிலருக்கு அன்று வேலையே நாடக்கும்.தேநீர்,காபி அதிகளவில் அருந்துவதால் உடலுக்கு கெடுதல் ஏற்படும் என்றாலும் அவற்றின் சுவை ருசிபார்க்க நம்மை இழுக்க செய்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.தலை வலித்தல் டீ குடிப்பது,தூக்கம் வராமல் இருக்க டீ குடிப்பது என்று டீக்கும் நமக்கும் இருக்கும் நெருக்கும் அதிகம்.ஒரு சிலருக்கு டீ தான் பெரும்பாலான நேரத்தில் உணவாக இருக்கும்.இப்படி நம் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிய தேநீரை மிகவும் சுவையாக செய்து எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1/4 லிட்டர்

*டீ தூள் – 1 ஸ்பூன்

*சர்க்கரை – 3 ஸ்பூன்

செய்முறை:-

1.முதலில் அடுப்பு பற்ற வைத்து அதில் டீ பாத்திரத்தை வைக்க வெண்டும்.

2.அதில் 1/4 லிட்டர் பால் ஊற்றி ஒரு கொதி வரும் வரை கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் சேர்க்க கூடாது.

3.அவற்றில் ஒரு தேக்கரண்டி டீ தூள் மற்றும் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

4.பிறகு அடுப்பை அணைத்து அவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி அருந்த வேண்டும்.